தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் அவ்வப்போது விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது 11 தடகள வீரர் வீராங்கனைகளுக்கு நடிகர் விஷ்ணு விஷால் உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இந்த தடகள வீரர்களுக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்க இருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவிகள் செய்வேன் எனவும் அதற்காக ஒரு நிரந்தர திட்டத்தை தற்போது வகுத்து வருகிறேன் எனவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.