தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பறிவு இயக்கும் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார். இந்த படத்திற்காக தற்போது லோகேஷ் கனகராஜ் பெரும் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் 10 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.