பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா உயிரிழந்த சோகமானது ரசிகர்களுடைய மனதை விட்டு நீங்கவில்லை. இந்நிலையில் 1000 படங்களுக்கு மேல் நடனமாடிய நடன இயக்குனர் சம்பத்ராஜ் (54) திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் பிரபல நடிகர் அஜித்தின் முதல்படமான அமராவதி மற்றும் காதல் கோட்டை, வான்மதி மற்றும் என் சுவாச காற்றே, சின்ன ஜமீன், மக்களாட்சி உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நடன இயக்குனர் சம்பத்ராஜ் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.