தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இருப்பினும் நடிகர் தனுஷ் தான் ஒரு ரஜினியின் ரசிகர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டு பாஸிட்டிவ் இமேஜ்களை போட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் நடிகர் தனுஷ் மீண்டும் தான் ஒரு‌ ரஜினியின் ரசிகர் என்பதை நிரூபித்து விட்டால் என ரசிகர்கள் கூறி வருகிறார்.