2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் அரசியல் உற்சாகத்தை சமாளிக்க, திமுக ஒரு வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் விஜய்க்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரகாஷ் ராஜ் திமுகவின் கொள்கைகளுக்கு ஏற்றவர் என்பதால், அவரை தேர்தல் பிரசாரத்தில் முக்கிய புள்ளியாக பயன்படுத்த திட்டமிடப் பட்டிருக்கின்றது.

மேலும் திமுகவின்  முக்கிய நோக்கம், பிரகாஷ் ராஜின் அரசியல் அனுபவத்தையும், பிரபல நடிகரான அவரின் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்வது என்பதாகக் கூறப்படுகிறது. பிரகாஷ் ராஜ் சமூக, அரசியல் அக்கறை கொண்டவர் என்பதாலும், திமுகவின் மக்கள் ஆதரவை வலுப்படுத்துவதிலும் இவரது பங்கு முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பிரகாஷ் ராஜ் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைவாரா அல்லது நடிகர் வடிவேலு போல, விஜய்க்கு எதிராக சாமானியமாகவே பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவாரா என்பது தெளிவாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.