கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் நவீன். இந்த சீரியலுக்குப் பிறகு இதயத்தை திருடாதே 2 மற்றும் கண்ட நாள் முதல் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இவர் செய்தி வாசிப்பாளரான கண்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கண்மணி கர்ப்பமாக இருக்கிறார். நடிகர் நவீன் சமீப காலமாக எந்த சீரியல்களிலும் கமிட்டாகாமல் இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது நடிகர் கவின் மற்றும் கண்மணி இணைந்து புதிதாக டீக்கடை பிசினஸ் ஒன்றினை தொடங்கியுள்ளனர். இந்த டீக்கடைக்கு கொட்டா காபி என பெயர் வைத்துள்ளனர். இந்த பெயர் வைப்பதற்கு இரண்டு வருடம் யோசித்ததாக நவீன் மற்றும் கண்மணி கூறியுள்ளனர். மேலும் புதிதாக டீக்கடை பிசினஸ் தொடங்கிய நவீன் மற்றும் கண்மணி ஜோடிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.