பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 4DX தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படக்குழு பொன்னியின் செல்வன் 2 படத்தின் அறிமுக வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளது. முதல் பாகத்திற்கு குரல் கொடுத்த நடிகர் கமல்ஹாசன் தான் இரண்டாம் பாகத்திற்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும் கமலின் கம்பீரக் குரலில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் அறிமுக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.