தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு திகழ்ந்த நடிகர் தான் சரத் பாபு. இவர் தெலுங்கில் 1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு 1977 ஆம் ஆண்டு பட்டிய பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சரியாக அந்த திரைப்படங்கள் இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதனால் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார். 71 வயதாகும் இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் நடிகர் சரத்பாபு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல் சீராக உள்ளதாக நேற்று செய்தி வெளியான நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. உடல் முழுவதும் விஷம் கலந்திருப்பதால் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.