தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் அகிலன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அகிலன் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.