தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு செட்டாகாது என்று பாலா அறிவித்ததோடு சூர்யா படத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பிறகு நடிகர் சூர்யாவும் வணங்கான் படத்திலிருந்து தான் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதோடு படத்தை தயாரிக்கும் முடிவையும் கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு பதில் அதர்வா படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதர்வா நடிக்கவில்லை. நடிகர் அருண் விஜய் தான் வணங்கான் படத்தில் நடிக்கின்றார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் பட பிடிப்பு வருகின்ற ஒன்பதாம் தேதியில் இருந்து தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சூர்யாவை தொடர்ந்து படத்தின் ஹீரோயினும் மாற்ற பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. மேலும் படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.