தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை தமன்னா நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை தமன்னா தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சமீப காலமாகவே என்னை பற்றி நிறைய வதந்திகள் பரவுகிறது.

வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் காதலிப்பதாக தகவல்கள் பரவுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. எல்லோருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். என்னை மில்க் பியூட்டி என்று தென்னிந்திய ரசிகர்கள் அழைக்கிறார்கள். என்னுடைய நிறத்தின் காரணமாகத்தான் அப்படி அழைக்கிறார்கள். மேலும் நான் அவர்களிடமிருந்து நிறைய அன்பை பெற்று இருக்கிறேன் என்று கூறினார்.