பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை தாண்டி அஜித்துக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய சென்ற விடுவார். இந்த நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது.

அவர் கூறியதாவது, மதம் என்பது மக்களை வெறுக்க வைக்கும். ஆனால் அவர்களை சந்தித்த பிறகு அது மாறும். மதம் மற்றும் இனத்தை வைத்து நாம் ஒரு கணிப்பில் இருப்போம். அவர்களை சந்தித்த பிறகு தான் அவர்களின் உண்மையான குணம் என்ன என்பது நமக்கு தெரியும். ஒரு பயணம் அங்குள்ள மக்களை பற்றி அறிந்து கொள்வதற்காக மட்டுமில்லாமல் அவர்களின் வாழ்க்கை முறை, மத நல்லிணக்கம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும். பயணம் ஒரு சாதாரண மனிதரை சிறந்த மனிதராக மாற்றும் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். அதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.