திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது, பிறந்த வீட்டைப் பிரியும் சோகத்தில் மணப்பெண்கள் கண்ணீர் விடுவது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு மணப்பெண் கேமராவுக்காக அழ முயற்சி செய்து, முடியாமல் வெடித்துச் சிரித்த காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.

அந்தப் பெண் விடைபெறும் போது, “கேமரா இருக்கிறதே.. நாமும் கொஞ்சம் அழுது பார்ப்போம்” என நினைத்து முகத்தை வருத்தமாக வைத்துக்கொள்ள முயன்றார்.

கண்ணீர் வராத நிலையில், அந்தப் பெண் சில நொடிகளிலேயே தனது முயற்சியைக் கைவிட்டு வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார். மணப்பெண்ணின் இந்த திடீர் மாற்றத்தைப் பார்த்த அங்கிருந்த உறவினர்கள் மற்றும் தோழிகளும் தங்களது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கத் தொடங்கினர்.

மணப்பெண்ணின் இந்த வெகுளித்தனமான செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. “இப்போதெல்லாம் விடைபெறுவது கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கான கண்டென்ட் ஆகிவிட்டது” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.