நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க முடிகிறது.

இந்நிலையில் UIDAI ஆனது “ஆதார் மித்ரா” என்ற புதிய சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு/இயந்திர கற்றல் தொழில்நுட்பம் வாயிலாக மக்களுக்கு சேவை செய்கிறது. இதன் மூலம் பயனர்கள் அருகில் உள்ள பதிவு மைய விபரங்கள், புகார் பதிவு, பிவிசி கார்டு கண்காணிப்பு, ஆதார் கார்டின் நிலை ஆகியவற்றை எளிதாக அறிந்துக்கொள்ளலாம். இந்த சாட்பாட் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகவல்களை வழங்குகிறது.