கர்நாடக மாநிலத்தில் தற்போது 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதல்வர் பசுவராஜ் பொம்மை பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் புதிதாக பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படும் எனவும், 2 வருடத்தில் கோவில்கள் மற்றும் மடங்கள் போன்றவைகள் சீரமைக்கப்படும் என்றும் கூறினார்.

அதோடு இதற்காக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் எனவும் முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார். இந்நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கலின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது என முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அதன் பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சட்ட போராட்டம் தொடரும் என்றும், மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.