சீன நாட்டைச் சேர்ந்த யாங் யான்சி (27) இவர் விமானத்துறையில் பணிப்பெண்ணாக பணியாற்றியிருந்தார். விமான பணி பெண்ணாக இருந்த இவர் தனது பணியை மாற்றி பன்றி வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டார். இதன் மூலம் இவர் ரூபாய் 22.8 லட்சம் வரை சம்பாதித்தார். இதுகுறித்து தனது வாழ்வின் மாற்றத்தை ஒரு ஆவண வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மிகவும் பிரபலமாகி கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றது.

கிராமபுரத்தில் பிறந்து மிகவும் கடினமாக படித்து விமான துறையில் பணியாற்றிய அவர் திடீரென தனது பாரம்பரிய தொழிலான பன்றி வளர்ப்பு மற்றும் விவசாயத்திற்கு மாறியது குறித்து கூறியுள்ளார். இதில், நல்ல கௌரவமான பணியாக இருந்தாலும் போதிய வருமானம் இல்லை மற்றும் பெற்றோர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை.

அவர்களது உடல்நிலை சரியில்லாத போது துணையாக இருக்க முடிவதில்லை. எனவே தனது பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டதாகவும் இதில் நல்ல வருமானம் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆவண வீடியோ வைரலாக பரவி இப்படியும் ஒரு பெண்ணா என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.