
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி என்ற பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்குச்சந்தையில் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் பணம் இழந்து உள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடன்கள் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.