தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகையான ராஷ்மிகா தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா நேற்று ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் நடிகர் விஜயை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். இதற்கு நடிகை ராஷ்மிகா லவ் என்று பதில் அளித்துள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.