அமெரிக்காவின் டென்னசி மாகாணம், நாஷ்வில் நகரைச் சேர்ந்த 35 வயது ஸ்கைடைவிங் பயிற்சியாளர் ஜஸ்டின் ராபர்ட் புல்லர், கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 4) 46 வயது நபருக்கு டேண்டம் ஸ்கைடைவிங் பயிற்சி அளித்தார்.

விமானத்தில் இருந்து குதிக்கும் போது, தாண்டம் ரிக் (இணைக்கப்பட்ட பாராசூட் அமைப்பு) அவர்களிடமிருந்து பிரிந்துவிட்டது. இதனால், பயிற்சியாளர் ஜஸ்டின் பாராசூட் இன்றி மின்னல் வேகத்தில் தரையில் விழுந்து, ஆச்லாந்த் சிட்டி ஹைவே அருகே காட்டுப் பகுதியில் உடல் முழுவதும் சிதறி உயிரிழந்தார்.

ஜான் சி. ட்யூன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Go Skydive Nashville நிறுவனத்தின் விமானமும், அதில் இருந்து குதித்த மற்ற மூன்று ஸ்கைடைவர்களும் பாதுகாப்பாக தரை இறங்கினர்.

மாணவரின் அவசர பாராசூட் தானாகத் திறந்து, அவர் மரக்கிளையில் சிக்கிக் கொண்டார், இதனால் சில மணி நேரம் அங்கேயே தொங்கிக் கொண்டிருந்தார். போலீஸ் ஹெலிகாப்டர் மூலம் அவரைக் கண்டுபிடித்த நாஷ்வில் தீயணைப்பு படையினர், கூடாரம், கயிறு உபகரணங்கள் பயன்படுத்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்;

அவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. ஜஸ்டினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், டேண்டம் ரிக் பிரிந்த காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபெடரல் அவியேஷன் அதிகாரிகளும் (FAA) இதை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.