ஒரு சில கேம்கள் மட்டுமே பெரியவர், சிறியவர் என வித்தியாசம் பாராமல் அனைவரையும் தன் ரசிகர்களாக மாற்றும். அப்படியான ஒரு மொபைல் வீடியோ கேம் ஆன ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 23 2023 முதல் விளையாட முடியாது. ஏற்கனவே இந்த கேமை பதிவு செய்து இருந்தால் இதை தொடர்ந்து விளையாட முடியும். அறிமுகமாகி ஓராண்டு கூட முழுமை அடையாத நிலையில் இந்த கேம் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது கேம் பிரியர்களை வருத்தத்திலும் ஆழ்த்தி உள்ளது.

வீடியோ கேம் நிறுவனமும் ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக் கேம்-ன் தயாரிப்பாளருமான ரோபியோ நிறுவனம் இந்த கேம் இன் மூலம் எங்களுடைய மற்ற கேம்களுக்கு ஏற்படும் தாக்கத்தின் விளைவாக இதை விநியோகத்திலிருந்து விளக்க முடிவு செய்துள்ளோம் என ட்விட்டர் வழியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.