மது போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களுக்காக பிரத்தியேகமான சாலை வழிகள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு குறியீடு லண்டனில் உள்ள லிவ்டன் கடற்கரை சாலையில் வரையப்பட்டு இருக்கின்றது. இந்த சாலை மக்களிடையே குழப்பத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அந்தச் சாலையில் ஒரு பகுதியில் மட்டும் அலைகளைப் போன்று வெள்ளை கோடு வரையப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்ட இந்த சாலையில் பார்க்கிங் வசதிக்கான இடம் போக எஞ்சிய பகுதி டூவீலர்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்டு அதுக்கான குறியீடு வரையப்பட்டிருக்கின்றது. அந்த குறியீட்டின் மற்றொரு முனையை முழுமையாக வரையாமல் இருந்ததால் அது பார்ப்பதற்கு போதையில் தள்ளாடி கொண்டே வண்டி ஓட்டுவது போல காணப்படுகின்றது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் சாலையில் வரையப்பட்டிருக்கும் குறியீட்டை கொண்டே வாகனங்கள் இயக்க வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக இருக்கும். ஆனால் லிவ்டனில் உள்ள கடற்கரை சாலையில் வரையப்பட்டிருக்கும் இந்த குறியீடு வாகன ஓட்டிகளை குழப்பமடையவே செய்யும் என்று பார்க்கிங் வசதியை மாற்றி அமைத்ததால் சிரமமாகவே இருக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்கள். மேலும் இந்த சாலை குறியீடுகள் வேண்டும் என்றே அலைகளைப் போல வரையப்பட்டதா அல்லது பாதியில் நிறுத்தப்பட்டிருப்பதற்கான குறியீடா? என சரியாக தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.