பிலிப்பைன்ஸில் இறைச்சியை விட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் மக்கள் விழி பிதுங்கி செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருகின்றது.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 887 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இது கோழி இறைச்சியின் விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். ஒரு கிலோ வெங்காயத்திற்காக ஒரு நாள் ஊதியத்தையே செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மார்ச் மாதத்திற்குள் சுமார் 22,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.