விமானத்தில் வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞரின் செயல் இணையதள வாசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகின்றது. இது தொடர்பாக ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற ஒரு வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றது. ஜனவரி 2ஆம் தேதி லண்டனிலிருந்து ஹைதராபாத் வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் தனது வருங்கால மனைவி பயணம் செய்ய உள்ளதை தன் நண்பர் மூலம் அறிந்து கொண்ட இளைஞர், அதே விமானத்தில் தானும் டிக்கெட் புக்கிங் செய்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எழுந்து தனது காதலி இருக்கை அருகே சர்ப்ரைஸ் ஆக வந்த அந்த இளைஞர் அந்த பெண் முன் மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அதைப் பார்த்து வெட்க புன்னகையோடு அந்தப் பெண் அந்த இளைஞரை ஆரத்தழுவி கொண்டார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் விமான பயணிகளின் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வாழ்த்து மழை பொழிய வைத்தது.