
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். அதன் பின் கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரம்மண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தமிழ் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டம் மன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழக வெற்றி கழகம் தயாராகி வருகிறது. இதற்கான நிர்வாகிகள் நியமனம் போன்ற பல வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
இதற்கிடையில் தவெக கட்சியில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் கேட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதேபோன்று வாட்ஸ்அப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் இடம்பெற்று இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.