
தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நேற்று அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘இரும்பின் தொன்மை’ புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்டான் சோழபுரம் அருங்காட்சியும் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைத்தால் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை தாங்கி கீழடி மற்றும் கங்கைகொண்டான் சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதன் பின் கீழடி இணையதளத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து இரும்பின் தொன்மை என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதன் பின் பேசிய அவர், அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்பு தாதுவில் இருந்து இரும்பினை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியுள்ளது. சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அறிவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ் நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்ற இதைக் கூறலாம்.
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்திலிருந்து தான் எழுதப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பெருமிதம் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாடு தமிழ் நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்று வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர். இந்திய வரலாறு தெருக்கில் தமிழ் நிலத்திலிருந்து இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.