இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது உலகின் நீளமான நாகப் பாம்பின் தலையில் ஒருவர் முத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த கருநாகம் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனமாகும். இது உலகின் நீளமான நாகப் பாம்பாக இருக்கிறது.

இந்த பாம்பின் விஷம் ஒரே அடியில் மனிதனை கொல்லக் கூடியது. இந்த வகை பாம்புகள் 12 அடி நீளம் முதல் 13 அடி நீளம் வரை வளர்கிறது. இதன் எடை 6 கிலோவாக இருக்கிறது. தற்போது வைரலாகும் வீடியோவில் 12 அடி நீளம் உள்ள ராஜ நாக பாம்பின் தலையில் ஒருவர் முத்தம் இடுகிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.