தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.

அவசர பணத் தேவைகளுக்கு நகைக் கடனையே அதிகம் நம்பி இருப்போம். அப்படி இருக்கையில் நகை கடனுக்கு அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக நம்பகத்தன்மையற்ற நிறுவனத்திடம் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினால் முதலுக்கு மோசம் ஏற்படும். ஆர்பிஐ உத்தரவுபடி நகையின் மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. சில நிதி நிறுவனங்கள் கூடுதலாக நகைக்கடன்களை வழங்கி ஈர்க்க பார்ப்பார்கள். எனவே எச்சரிக்கை தேவை.