தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு “மாஸ்” திருப்பமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்தார்.

கடந்த சில நாட்களாக தேமுதிகவின் நிலைப்பாடு குறித்துப் பல யூகங்கள் நிலவி வந்த நிலையில், இன்று காலை இந்த அதிரடி கூட்டணி உறுதியானது. இந்தச் செய்தியைக் கேட்டதுமே தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

காலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இன்று இரவு தேமுதிக செய்தி தொடர்பாளர் நடிகர் ராஜேந்திரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“>

 

அங்கு மணமக்களை வாழ்த்திய முதலமைச்சரை, தேமுதிகவினர் உற்சாகமாக வரவேற்றனர். ஒரே நாளில் கூட்டணி உறுதியாகி, குடும்ப விசேஷத்திலும் முதலமைச்சர் பங்கேற்றது, திமுக – தேமுதிக இடையேயான நெருக்கம் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.