மதுரை அரசியலில் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பி.எம்.மன்னன் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது அவரது ஆதரவாளரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர். கோபி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் மதுரையில் முக்கிய நிர்வாகிகள் இப்படி கட்சி மாறுவது திமுகவுக்குப் பின்னடைவாகவும், அதிமுகவுக்குப் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
