ரஷ்யா கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30) அதிக அளவிலான 8.8 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடல் நாடுகள் அனைத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமி அச்சுறுத்தல்:
இந்த நிலநடுக்கத்தால் ஹவாய், சிலி, ஜப்பான், சாலமன் தீவுகள் உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் சுமார் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்துள்ளன. இதனால் கடலோர நகரங்களில் பேரழிவு ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ஜப்பானின் ஹோக்கைடோ, ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுனாமி அலைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை மையம் அவசர எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ரியோ தட்சுகியின் கணிப்பு – பாபா வங்காவுக்கு மாற்றா?
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அச்சுறுத்தல் நேரம், பலர் “புதிய பாபா வங்கா” என அழைக்கப்படும் ஜப்பானிய மங்கா கலைஞர் ரியோ டட்சுகியின் கணிப்புடன் ஒத்துப்போவதாக சமூக வலைதளங்களில் பரவுகிறது.
ரியோ டட்சுகி, 1999ஆம் ஆண்டு, தனது கனவுகள் அடிப்படையில் 2025 ஜூலை மாதத்தில் ஜப்பானில் பெரிய சுனாமி ஏற்படும் என கணித்ததாக கூறப்படுகிறது. மேலும், 2011ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியை விட இது மூன்றரை மடங்கு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் ஜப்பானின் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிக்கும் என்றும் அவர் கணித்திருந்தார். இதையடுத்து, அவரது வரைபடங்கள், சுனாமி ஓவியங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஜூலை 5 அன்று சுனாமி வரும் எனவும்…
ரியோ டட்சுகி தனது கணிப்பில் ஜூலை 5, 2025 அன்று ஜப்பானை நேரடியாக ஒரு மெகா சுனாமி தாக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தாலும், அந்த தேதியில் எந்த பேரழிவும் நிகழவில்லை. ஆனால் தற்போது ஜூலை 30 அன்று ஏற்பட்ட ரஷ்ய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள், அவரது கணிப்பு ஒவ்வொரு நாளும் நிஜமாகும் என்ற உணர்வை நெட்டிசன்களுக்கு உருவாக்கியுள்ளது.
பாபா வங்கா கணிப்புகளும் மீண்டும் பேசப்படுகின்றன:
பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது வாழ்க்கைக்காலத்தில் பல கணிப்புகளை கூறியவர். 2025 ஆண்டுக்கான அவரது சில முக்கியமான கணிப்புகள் பின்வருமாறு:
ஐரோப்பாவில் போர்: கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளுக்கு இடையே பெரும் மோதல் ஏற்படும். இது மக்கள் தொகைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உலகளாவிய பொருளாதார நெருக்கடி: வேலைவாய்ப்பு குறைவு, நிதி பற்றாக்குறை ஆகியவை ஏற்படும்.
ஆசியாவில் இயற்கை பேரழிவுகள்: நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்படும். இது தற்போது ஜப்பானில் ஏற்பட்ட நிலைமையை ஒத்திருக்கிறது.
ஐரோப்பாவின் மக்கள்தொகை குறைவு: பிறப்பு விகிதம் குறைவதால் மக்கள் தொகை குறையும்.
வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு: மனிதர்கள் எதிர்காலத்தில் வேற்றுக் கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள்.
புதிய நோய்கள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள்: மர்மமான புதிய நோய்கள் தோன்றும், அதேசமயம் மருத்துவ கண்டுபிடிப்புகள் மூலம் பல நோய்களுக்கு தீர்வு காணப்படும்.
சமூக ஊடகங்களில் பரவும் பயம்:
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல், இயற்கையின் எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றது. “கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் இயற்கையின் எச்சரிக்கையா?” என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு மத்தியில், பாபா வங்கா மற்றும் ரியோ தட்சுகி போன்றோரின் கணிப்புகள் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
ஆனால் அதிகாரப்பூர்வமாக ஜப்பான் அரசு எந்த கணிப்பையும் ஏற்கவில்லை என்றாலும், பசிபிக் கடல் பகுதிகளில் உள்ள அனைத்து நாடுகளும் தற்போது உயர் அளவிலான எச்சரிக்கையில் உள்ளன. பொதுமக்கள், கடலோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கவுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
