ஹரியானாவின் ரேவாரி பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு யூடியூபர். இவருக்கு 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். கடந்த 2017ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.

பிரவீன் ஆட்டோ ஓட்டுனர் ஆகவும், மணல் மற்றும் கற்கள் விற்கும் கடையில் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ரவீனாவின் சமூக ஊடக செயல்பாடுகள் மற்றும் அவரது நட்பு உறவுகள் காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் மற்றொரு யூடியூபரான சுரேஷ் சந்தித்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் ரவீனா, சுரேஷ் உடன் சேர்ந்து ஒன்றாக வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று பிரவீன் வீட்டிற்கு வந்தபோது ரவீனா மற்றும் சுரேஷ் நெருக்கமான நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவீனாவும், சுரேஷும் சேர்ந்து பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஒரு துணியில் மூடி, மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று பவானி நகரின் வெளிப்பகுதியில் உள்ள கால்வாயில் வீசினர். பிரவீன் மாயமானதை அறிந்த அவரது தந்தை ரவீனாவின் மீது சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,

அதன்படி காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பிரவீனின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரவீனாவை விசாரித்தனர். அதில் அவர் தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.