பெங்களூருவில் பெய்த கனமழையால் நகரம் முழுவதும்  பாதிப்படைந்துள்ளது. மேலும்  பரபரப்பான சாலையில், பல ஆண்டுகளாக இருந்த பழமையான மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது.

அந்த சம்பவம் நடந்த நேரத்தில், அந்த இடத்தில் ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் கூறுவதில், அவரது உடல்நிலை நலமாக உள்ளது என கூறினர்.

 

View this post on Instagram

 

A post shared by ABP News (@abpnewstv)

அந்த மரம் விழுந்த சம்பவம் முழுக்க முழுக்க சிசிடிவி காட்சியில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மரம் எப்படி திடீரென விழுகிறது, அருகிலுள்ளவர்கள் எவ்வளவு அதிர்ச்சியுடன் பீதி அடைந்து ஓடுகிறார்கள் என்பதையும் காணலாம். இந்த விபத்தில், 3 கார்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு பைக்குக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிரேன் மற்றும் ரம்பம் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர்.

சுமார் 2 மணி நேரத்தில் இடிபாடுகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. அந்த மரம் கடந்த சில ஆண்டுகளாக பலமுறை கிளைகள் விழுந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.