இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். இந்தியாவில் 11 மாதங்கள் மற்றும் விபி சிங் பிரதமராக இருந்திருந்தாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. அவர் தமிழ்நாட்டை தன்னுடைய சொந்த மாநிலமாக நினைத்தார். கலைஞர் கருணாநிதியை சொந்த சகோதரராக மதித்தார். லட்சியம் மற்றும் கொள்கைக்காக என்னோடு இருந்தவர் கலைஞர் கருணாநிதி என கூறினார்.

பதவி காலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியவர். நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல சாதனைகளை செய்தவர் விபி சிங் என முதல்வராக ஸ்டாலின் கூறினார். மேலும் சமூக நீதி காவலர் முன்னாள் பிரதமர் வி.பி சிங் அவர்களை போற்றும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.