இந்திய ரயில்வேயின் பொதுப் பெட்டியில் பயணம் செய்வது பெரும் சவாலாகக் கருதப்படும் நிலையில், மும்பையிலிருந்து வாரணாசி வரை சுமார் 24 மணிநேரம் பொதுப் பெட்டியில் பயணித்த கென்ய நாட்டைச் சேர்ந்த வி்ன் சோல் என்ற வெளிநாட்டுப் பயணியின் அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
கூட்ட நெரிசல் மிகுந்த பெட்டியில் அமர இடமின்றித் தவித்த அவர், தனது கால்களுக்கு அருகிலேயே சக பயணிகள் உறங்குவதையும், போதையில் இருந்த நபர் ஒருவர் தனக்குத் தொந்தரவு அளித்ததையும் காணொளியாகப் பதிவிட்டுள்ளார். வசதி குறைந்த இந்தப் பயணத்திலும், சக பயணி ஒருவர் அவருக்கு அன்பளிப்பாக ஒரு சங்கிலியை வழங்கிய நெகிழ்ச்சியான தருணங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் துயரம் கலந்த சுவாரசியமான பயணக் காணொளியைக் கண்ட இணையவாசிகள், இந்திய ரயில்களின் பொதுப் பெட்டி நிலைமையைக் கண்டு வருத்தம் தெரிவிப்பதுடன், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிப்பதே பாதுகாப்பானது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
