
ஹரியானாவில் ராதிகா யாதவ்(25) என்ற டென்னிஸ் வீராங்கனை வசித்து வந்துள்ளார். இவர் மாநில அளவிலான பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றார். இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது தந்தை பலமுறை கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் ராதிகா ரீல்ஸ் அடிமையிலிருந்து மீண்டு வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை தனது மகள் என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். அதாவது 5 முறை துப்பாக்கியால் சுட்டதில் 3 குண்டுகள் ராதிகா மீது பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராதிகா தந்தையை கைது செய்து அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.