கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சம்பத் ஜெ ராம். இவர் திடீரென பெங்களூரில் உள்ள நீலமங்கலா பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். நடிகர் சம்பத்துக்கு தற்போது 35 வயது மட்டுமே ஆகும் நிலையில் திடீரென தற்கொலை முடிவு எடுத்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத்தில் சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வந்த சம்பத் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் Sri Balaji photo studio என்ற படம் வெளியானது. இந்நிலையில் நடிகர் சம்பத்துக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக‌ கூறப்படுகிறது. கடந்த வருடம் நடிகர் சம்பத்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் நடிகர் சம்பத் தற்கொலை செய்து கொண்டது கன்னடத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.