தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு போன்றோர்‌ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போன நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அயலான் திரைப்படத்தில் 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் படம் முழுக்க ஏலியன் காட்சிகள் இருக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஏழு வருடங்களுக்கு பிறகு அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அறிவித்தள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.