சமூக வலைதளங்களில் தினமும் பல நூறு வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அவற்றில் சில மாஜி த்ரில்லர் கதைகளை மிஞ்சும் அளவிற்கு வதைகளுடன் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் காட்டு தீ போல பரவிய ஒரு வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஈராக்கைச் சேர்ந்த ஷியா பெண் ஒருவர், தனது கணவரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக இருப்பதாகவும், அதனால் அவர் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறி அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரிடம் உடலுறவு கொள்ளக்கேட்டதாக ஒரு அதிர்ச்சித் தகவலுடன் அந்த வீடியோ பகிரப்பட்டது. எக்ஸ் உள்ளிட்ட பல தளங்களில் இந்த வீடியோ தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியது. உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையிலான விவகாரம் என்பதால், இந்தச் செய்தி இணையத்தில் வேகமாகத் தீப்பற்றியது.
ஆனால், இந்தச் செய்தியின் பின்னணியில் உள்ள உண்மையை பிரபல ஊடகத்தின் உண்மை கண்டறியும் குழு தோண்டித் துருவியது. அப்போதுதான் அந்த வீடியோவின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், இந்த வீடியோவுக்கும் நிஜ உலகத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது உறுதியானது. ஈராக் அதிகாரிகளோ அல்லது அமெரிக்க ராணுவத் தரப்போ இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி, இந்தக் கட்டுக்கதை வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த ஃபேக்ட் செக் குழுவினருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வீடியோவானது முற்றிலும் புனையப்பட்ட ஒரு அடல்ட் வீடியோ என்பது கண்டறியப்பட்டது. ஆபாச இணையதளம் ஒன்றில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு பழைய க்ளிப்பை எடுத்து, அதற்குத் தகுந்தாற்போல ஒரு பொய் கதையை உருவாக்கி சமூக வலைதளங்களில் சில விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பியுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் எதைப் பார்த்தாலும் உடனடியாகப் பகிராமல் அதன் உண்மையைச் சரிபார்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
