தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் படத்தை தயாரித்திருந்தார். சச்சின் படத்தை ஜான் மகேந்திரன் இயக்க ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார். சச்சின் படத்தை ரசிகர்கள் அப்போது கொண்டாடினாலும் தோல்வி படம் என்றே பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் தாணு சச்சின் படம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது சச்சின் தோல்வி படம் கிடையாது என்றும் அப்படம் 100 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடியது என்றும் கூறியுள்ளார். அதே சமயம் சச்சின் படத்துடன் சேர்ந்து சந்திரமுகி படம் ரிலீஸ் ஆனதால் சச்சின் திரைப்படத்தின் வெற்றி பெரிய அளவில் தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி மற்றும் தெறி ஆகிய இருவர் வெற்றி படங்களையும் தயாரிப்பாளர் தாணு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.