தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி பகுதியில் உள்ள ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் (Hostel) நடந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நவம்பர் 12, 2025 அன்று இரவு, விடுதி மாணவர்கள் இரவு உணவு உண்ணச் சென்றபோது, சமையல் கூடத்தில் இருந்த காவலாளி சந்திரசேகர் என்பவர், மாணவர்களுக்காகச் சமைத்து வைக்கப்பட்டிருந்த சாதம் இருந்த பெரிய பாத்திரத்திற்குள் தன் காலை வைத்த நிலையில், குடிபோதையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
A drunk watchman deployed at a hostel in #Telangana’s #Sangareddy was on Wednesday, November 12 seen sleeping with his foot in rice prepared for students.
The incident occurred at a polytechnic college in the #Ismailkhanpet area. pic.twitter.com/qPiNrBeduj
— Hate Detector 🔍 (@HateDetectors) November 14, 2025
சந்திரசேகர் சில மாதங்களாகவே விடுதியில் தற்காலிகக் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் என்றும், அவர் மிகவும் போதையில் இருந்ததால், மாணவர்கள் அவரை எழுப்ப எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனே சுதாரித்துக் கொண்ட மாணவர்கள், சமையல் ஒப்பந்தக்காரரைத் தொடர்பு கொண்டனர். அவர் உடனடியாக அந்தச் சாதத்தை அப்புறப்படுத்திவிட்டு, மாணவர்களுக்குப் புதிய உணவைச் சமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் விடுதிப் பணியாளர்கள் கண்காணிப்பு குறித்துச் serious ஆன கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாகக் காவலாளியை வேலையில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார்.
