​பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பரபரப்பான அரசியல் திருப்பமாக, ஜன்சுராஜ் கட்சி தொண்டர் துலார்சந்த் கொலை வழக்கில் கைதாகி, கடந்த நவம்பர் 2ஆம் தேதி முதல் சிறையில் இருக்கும் பாஜக கூட்டணி (JDU) வேட்பாளர் ஆனந்த் சிங், மோகமா தொகுதியில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.

கொலை வழக்குக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இருந்த போதிலும், இவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளரைவிட 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு வேட்பாளர், தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது