மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 21 வயதான ராகில் (Rahil) என்ற இளைஞர், தன் கவாசகி நிஞ்ஜா (Kawasaki Ninja) பைக்கில் சட்டவிரோதமாக மாற்றி அமைக்கப்பட்ட நம்பர் பிளேட்டைப் பயன்படுத்தியுள்ளார்.
அதில், வண்டியின் பதிவு எண்ணுக்குப் பதிலாக, “ஓடிப் போவேன்” (Will Run) என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த பைக்கின் புகைப்படத்தை ராகிலின் நண்பர் நித்திஷ் என்பவர் ‘முடிஞ்சா பிடிச்சுப் பாருங்க’ (Catch me if you can) என்று புனே காவல்துறைக்குச் சவால் விடுக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் (X தளத்தில்) பதிவிட்டார்.
Street’s not the place to play, boy!
We always keep our promises. 😉
Turns out the guy wasn’t elusive enough. Played dangerous games, won dangerous prizes.#NoConsolationPrize#ChallengeCompleted#ElusionEndsHere#CaughtYou#AlwaysForPunekars#PunePolice@CPPuneCity https://t.co/zAoMI5Yld6 pic.twitter.com/mlAGVvz4ro— पुणे शहर पोलीस (@PuneCityPolice) November 12, 2025
இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட புனே நகர போலீஸ் உடனடியாகப் பதிலளித்தது. “நாங்கள் பிடிப்போம், பிடிப்போம்! அது காலத்தின் விஷயம் மட்டுமே. எங்களின் அப்டேட்களுக்காகக் காத்திருங்கள்!” என்று போலீஸ் ட்வீட் செய்தது.
சவால் விடுத்த சில மணி நேரங்களிலேயே போலீசார் ராகிலைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். பின்னர், ராகில் தவறுக்கு மன்னிப்பு கோரும் வீடியோவைப் பதிவிட்டு, “நான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன். இதுபோன்ற செயல்களை யாரும் செய்ய வேண்டாம்” என்று அவர் கூறினார்.
மேலும், புனே போலீஸ், “இது விளையாடும் இடமல்ல பையனே! நாங்கள் எப்போதும் எங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து, சவாலை முடித்துவிட்டதாகப் பதிவிட்டது.
