ஹரியானா மாநிலம் குருக்ராமில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி மருந்துகளைத் தயாரித்து வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவி ஏக்வீர் சர்மா என்ற வாலிபர், உலகப்புகழ் பெற்ற உடல் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு மருந்தான ‘Mounjaro’ ஊசிகளைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான தயாரிப்பு முறை, பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்துதல் என அனைத்தையும் கூகுள் தேடல், யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஏஐ தளங்கள் மூலம் கற்றுக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சீனாவின் ‘அலிபாபா’ தளம் மூலம் ₹2.5 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்களை வரவழைத்த இவர், அதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டக் கணக்கு போட்டுள்ளார்.

குறிப்பாக, ஒரு ஊசியை ₹45 லட்சத்திற்கு விற்கவும், மாதந்தோறும் ₹2.5 கோடி சம்பாதிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார். மெடிக்கல் ஸ்டாஃப்களே ஏமாறும் அளவிற்கு அச்சு அசல் ஒரிஜினல் போலப் பேக்கிங் செய்யப்பட்ட இந்த ஊசிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை, டிரக் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அதிரடியாகச் சோதனையிட்டு மூடினர்.

தற்போது அவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த போலி மருந்துகள் யாருக்காவது விநியோகம் செய்யப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.