தில்லி நகரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் சாலைகள் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல் தில்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள குதுப் சாலையில், 3.45 மணி அளவில் ஒரு கனரக லாரி சென்று கொண்டிருந்த போது சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனால் அந்த லாரியின் பின் பகுதி நிலத்துக்குள் மூழ்கியது. லாரி நிறைந்த எடையுடன் சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
Video: Truck Gets Stuck In Pothole After Part Of Delhi Road Caves In https://t.co/J6GSXdS9FL pic.twitter.com/ONWjnwTDgI
— NDTV (@ndtv) August 3, 2025
இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். “முக்கியமாக இந்த பகுதியில் சாலைகள் பழுதடைந்து இருக்கின்றன. மழைக்காலங்களில் பராமரிப்பு எடுக்கப்படாததால் இப்படி விபத்துகள் நடக்கின்றன,” என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியை அகற்ற கிரேன் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், வானிலை மையம் தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
