டெல்லி வெல்கம் வடகிழக்கு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி  அப்பகுதியில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதி உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை செய்தனர். அப்போது தம்பதியினர் தங்கி இருந்த ஒரு வீட்டில் சிறுமி மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனடியாக சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது .  இதனையடுத்து போலீசார் அந்த தம்பதியினரிடம் விசாரணை நடத்தியதில் கடைக்கு வந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து பெண்ணின் கணவர் வீட்டில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியை விற்க கணவன் மனைவி இருவரும் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதனை கேட்ட போலீசார் உடனடியாக 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.