ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கல்யாணி சாகு (18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அங்குள்ள விடுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் நீட் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் மாணவி 18 மாதங்களாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததும், பயிற்சி மையத்தில் அழுத்தம் கொடுத்ததும், அதை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதற்கிடையில் விடுதியில் உள்ள மற்ற மாணவர்கள், அவரை சித்திரவதை செய்தார்கள் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதோடு விடுதி மற்றும் பயிற்சி மைய அதிகாரிகள் அவரது பிரச்சினையை தீர்க்கவில்லை என்றும் கூறினர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.