கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி நகரில் மாநில சுற்றுலாத்துறை சார்பாக கடந்த 27-ஆம் தேதி ஹம்பி உற்சவம் என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. இதன் இறுதி நாளான நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் கைலாஷ் கேர் பாடல் பாடி கொண்டிருந்தபோது இசை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இரண்டு பேர் அவர் மீது தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசி உள்ளனர்.

இந்த தாக்குதலால் அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்  அங்கு சென்று இரண்டு இளைஞர்களை வெளியேற்றி அதன் பின் கைது செய்துள்ளனர். இதில் பாடகர் கைலாஷிற்க்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் பாடகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.