சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரை முன்னிட்டு அவையை தொய்வின்றி நடத்தும் நோக்கில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவையின் துணைத்தலைவரான ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அவைத் தலைவர், நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் உள்ளிட்ட பல கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

எனினும் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் இடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்தில் 27 கட்சிகளை சேர்ந்த 37 தலைவர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார். மேலும் கூட்டத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் எல்லையில் சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கூறினர். எனினும் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் என்பதால் அது குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என மத்திய அரசு பதிலளித்துள்ளது.