எலான் மாஸ்க் ஆதரவுடன் OpenAI நிறுவனத்தின் Chat GPT என்பது செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு பயனர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் இலவச சாட் பாட் ஆகும். இந்த Chat GPT குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தாலும் தற்போது சிலருக்கு கவலை அளிக்கும் விஷயமாக வளர்ந்து வருகின்றது. பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் Chat GPT-யை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்களால் தவறாக பயன்படுத்தப்படும் Chat GPT பல்கலைக்கழக வளாகத்திற்குள் தடை என அப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Chat GPT மட்டுமல்லாமல் பிளாக் பாக்ஸ், ஹிட் அப் கோ பைலட் போன்ற பிற AI கருவிகளையும் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் வழங்கிய ஆலோசனையில் Chat GPT போன்ற பிற கருவிகளை மாணவர்கள் தேர்வுகளில், தங்கள் வேலைகளை முடிக்க பயன்படுத்த கூடும் என்பதால் தடை செய்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.