நாடு முழுவதும் பொதுவாக உள்ள புற்று நோய்களை கட்டுப்படுத்த மத்திய அரசானது தேசிய அளவிலான திட்டத்தை வகுத்து உள்ளது. தேசிய சுகாதார கொள்கையின் கீழ் NPCDCS திட்டத்தின் வழியாக கர்பப்பை வாய், மார்பகம், இருபாலினருக்குமான வாய் வழி புற்றுநோய்களை பரிசோதனை வாயிலாக கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில் கர்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் HPV தடுப்பூசியை ஜூன் முதல் 9-14 வயதுடைய சிறுமிகளுக்கு வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக சீரம் நிறுவனம், “செர்வாவாக்” தடுப்பூசியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஏப்ரல் மாதத்தில் 16.02 கோடி டோஸ் தடுப்பூசிகள் சப்ளை செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட உள்ளது. இதில் சீரம் நிறுவனத்துடன் இணைந்து மெர்க் நிறுவனமும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.